• +91 9489606040, +91 7868887575
  • regnboss@gmail.com

தொழில் நிறுவனங்களுக்கு தங்கள் தனித்துவமான சின்னம் மற்றும் பெயரை (Trade Mark ) பிறர் பயன்படுத்துவதிலிருந்து எவ்வாறு தடுக்கலாம்?


     இந்த நவீன உலகில் ஏற்பட்ட தொழில் புரட்சியின் காரணமாக தொழில் நிறுவனங்கள்  வியாபார கிளைகளைப் பெருக்கி இதன் மூலம் வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில் தங்கள் பெயர் அல்லது அடையாள சின்னங்களை பிரபலப்படுத்துவதற்காக பெரும் தொகையை விளம்பரத்திற்காக செலவு வேறுபடுத்தி காட்டுகின்றது செய்து தங்கள் நிறுவனத்தின் தனித்துவமான அடையாளத்தை நிலைநிறுத்த முயற்சிக்கிறார்கள். ஆனால் அந்த தனித்துவமான அடையாளத்தை  அல்லது  பெயரை பதிவு செய்யாத பட்சத்தில் நம் நிறுவனத்தின் அடையாளத்தை நம் போட்டி நபர்கள் அல்லது நிறுவனங்கள் பயன்படுத்தி நிறுவனத்திற்கு  வர வேண்டிய இலாபத்தை அவர்கள் அள்ளி செல்வார்கள். அதுமட்டுமல்லாமல் நாம் பதிவு செய்யாமல் விட்டுவிட்டால் நம் நிறுவனத்தின் அடையாளத்தை வேறொருவர் முதலில் பதிவு செய்யும் பட்சத்தில் நமக்குரிய அடையாளத்தை நாம் பயன்படுத்த முடியாமல் இழக்க வேண்டிய சூழ்நிலை நேரிடும். ஏனென்றால் Tarde  Mark சட்டம் 1999 மற்றும் Trade Mark விதிகள் 2002-ன் படி தங்கள் தனித்துவ பெயர் மற்றும் அடையாள    சின்னங்களை முதலில் பதிவு செய்யும் நிறுவனங்களுக்கு மட்டுமே அதை பயன்படுத்தும் உரிமை வழங்கப்படுகிறது. ஆகவே காலம் தாமதிக்காமல் தங்கள்  நிறுவன பெயர்களை அதிக பொருள் செலவில் விளம்பரப்படுத்துவதற்கு  முன்பு முறையாக மேற்படி சட்டம் மற்றும் விதிகளின்படி பதிவு செய்து போலியாக பிறர் பயன்படுத்துவதை தவிர்க்கலாம். இந்த பதிவை தான்  Trade Mark  பதிவு என்கிறோம்.


Trade Mark என்றால் என்ன?


    வணிக பொருட்களையோ அல்லது சேவைகளையோ வாடிக்கையாளரிடம் தனித்துவமாய் அடையாளப்படுத்த நிறுவனம் பயன்படுத்தும் சின்னம், முத்திரை  அல்லது குறியீட்டையே Trade Mark  என்கிறோம். இந்த Trade Mark ஒருவரின் அல்லது  ஒரு நிறுவனத்தின்  வியாபார பொருட்களை அல்லது சேவைகளை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டுகின்றது .  


Trade Mark பதிவு செய்யும் முறை?




ஒரு ணிகர் இந்த ட்ரேட் மார்க்கை அதற்க்குரிய கட்டணத்துடன்  சென்னையில் உள்ள ட்ரேட் மார்க் பதிவு அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது டிஜிட்டல் கையொப்பத்தினை (Digital Signature)  பயன்படுத்தி இணையம் வழியாகவோ ipindia.gov.in என்ற இணையம் வாயிலாக படிவம் TM-A விண்ணப்பித்து உரிய கட்டணத்தை செலுத்தி நிறுவனத்தின் தனித்துவ பெயர் அல்லது அடையாள சின்னத்தை பதிவு  செய்யலாம். பின்னர் அங்குள்ள ட்ரேட் மார்க் பதிவு அலுவலர்களால் முறையாக ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டு நீங்கள் குறிப்பிட்டுள்ள பெயர் மற்றும் சின்னம் ஏற்கனவே பதிவு செய்யப்படாததாயின் ட்ரேட் மார்க் தொடர்பாக வெளியிடப்படும் இதழில் நமது ட்ரேட் மார்க் முத்திரை வெளியிடப்பட்டு யாரும் மறுப்பு தெரிவிக்காத பட்சத்தில் விண்ணப்பித்தவருக்கு ட்ரேட்  மார்க் பதிவு சான்றிதழ் வழங்கப்படும். 


பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்:


        1.ஆதார் அட்டை 

         2. பான் கார்ட் 

         3. டிஜிட்டல் கையொப்பம் (Digital Signature )

          4. நிறுவன பதிவு சான்றிதழ்

          5. பதிவு செய்ய விரும்பும் நிறுவனத்தின் சின்னம் (6X 6) Size 


    இவ்வாறு நிறுவனத்தின் பெயர் மற்றும் சின்னத்தை பதிவு செய்யும் பட்சத்தில் நம் நிறுவனத்தின் பெயர் மற்றும் சின்னத்தை போலியாக பிறர் பயன்படுத்துவதை தடுப்பதுடன்   மீறி பயன்படுத்தும் பட்சத்தில் பெரும் தொகையை இழப்பீடாக பெற  முடியும். இவ்வாறு நம் தொழில் நிறுவனத்தை தனித்து அடையாளப்படுத்தி நீண்ட நாள் தொழிலை தக்க வைக்கலாம்.


    எங்கள் நிறுவனம் “Registration Boss “ ட்ரேட் மார்க் பதிவு, புதுப்பித்தல் போன்ற எண்ணற்ற சேவைகளை பல நிறுவனங்களுக்கு அளித்து வருவதுடன் எண்ணற்ற நிறுவனங்கள் எங்கள்  மூலம் பயனடைந்துள்ளார்கள். மேலும் தங்கள் நிறுவனத்தின் தனித்துவ பெயர் மற்றும் அடையாள சின்னம் பதிவு செய்வதற்கான ஆலோசனைகளுக்கு எங்கள் நிறுவன பிரதிநிதியயை  அல்லது +91 9489606040 என்ற எண்ணையோ தொடர்பு கொண்டு பயன் பெறலாம். 



       

Featured Post
Editors Picks
2015 © All Rights Reserved | Designed and Developed by Smarteyeapps.com