• +91 9489606040, +91 7868887575
  • regnboss@gmail.com

            ஒருவர் உயிரோடு இருக்கும்போது கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் அசையும் மற்றும் அசையா சொத்துகளை தனது காலத்திற்குப் பிறகு தனது விருப்பப்படி யாருக்கு சென்றடைய வேண்டும் என்பதை குறிப்பிட்டு தான்உயிரோடு இருக்கும்போதே சாட்சிகள் முன்னிலையில் ஆவணமாக எழுதி வைக்கப்பட்டிருக்கும் ஆவணம் உயில் ஆவணம் ஆகும். இந்த உயில் ஆவணத்தை தனது வாழ்நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம். ஆனால் கடைசியாக எழுதி வைக்கப்பட்டிருக்கும் ஆவணமே செல்லத்தக்கதாகும்.


            


நாம் கஷ்டப்பட்டதை போன்று நம் பிள்ளைகளும் கஷ்டப்படக்கூடாது என்ற நோக்கில் அவர்களுக்காக வேண்டி சொத்து சேர்த்து வைக்கிறோம். ஆனால் நான் இருக்கும்போதே முறையாக அதை அவர்களுக்கு பிரித்துக் கொடுத்து ஆவணமாக பதிவு செய்யாவிடல் நம் காலத்திற்கு பிறகு நம் எண்ணம் போல் அவர்கள் சந்தோசமாக அனுபவிக்காமல் சொத்தை பிரிப்பதில் சண்டை ஏற்பட்டு நீதிமன்றத்தை நாடி அலைந்து வருவதை கண்கூடாக பார்க்கிறோம்.



          ஒரு சிலர் தாம் உயிரோடு இருக்கும்போது தன் சொத்தை பிள்ளைகளுக்குப் பிரித்து கொடுத்துவிட்டால் இறுதி காலத்தில் தன்னை கவனிக்காமல் கைவிட்டு விடுவார்களோ என்ற அச்சத்திலும் மனப்பான்மையிலிருந்து வருகிறார்கள். இந்த தவறான மனப்பான்மை முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும். நீங்கள் உயிர் ஆவணமாக உங்கள் சொத்தை பிரித்து உங்கள் வாரிசுகளுக்கு எழுதி வைப்பதால் உடனேயே உங்கள் வாரிசுகளுக்கு சென்று சேர்வதில்லை. கடைசிவரை உங்கள் அனுபவத்திலேயே இருந்து உங்கள் காலத்திற்குப் பிறகு தான் சொத்து அவர்களை சென்றடையும் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.



              இந்த உயில் ஆவணம் Ordinary Will மற்றும் Sealed Cover Deposit Will ஆகிய இரண்டு வழிகளில் பதிவு செய்து வைக்க முடியும். இதில் Ordinary Will என்பது சாதாரண முறையில் சார் பதிவு அலுவலகத்தில் உயில் ஆவணம் பதிவு செய்து அதன் அசல் ஆவணத்தை பதிவு செய்த நபரின் கைவசம் ஒப்படைக்கப்பட்டுவிடும். Sealed Cover Deposit Will என்பது அசல் உயில் ஆவணத்தை வேறு வெளி நபர்களுக்கு தெரியாத வண்ணம் கவரில் அடைக்கப்பட்டு சில் செய்து சார் பதிவக காப்பகத்தில் வைக்கப்பட்டு உயில் ஆவணம் எழுதி வைத்த நபர் மறைவிற்குப் பிறகு அன்னாரின் இறப்பு சான்றிதழை சார்பதிவாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டு அதன்பிறகே அந்த உயில் ஆவணம் பிரிக்கப்பட்டு சன் சாராம்சங்கள் வெளி உலகத்திற்கு தெரிவிக்கப்படும். இதில் முதல் விதம் நாம் எழுதி வைக்கப்பட்டிருக்கும் சொத்து யார் யாருக்கு சென்றடையும் என்பதை நாம் இருக்கும் காலத்திலேயே நம் பிள்ளைகள் தெரிந்து கொள்வார்கள். இரண்டாம் விதம் நம் காலத்திற்கு பின்பு அந்த சொத்தின் விவரங்களை நம் பிள்ளைகள் தெரிந்து கொள்வார்கள்.



              சாதாரணமாக நம் சிறுபிள்ளைகளுக்கு எதையாவது வாங்கிக் கொடுக்க வேண்டுமென்றால் கூட நாம் முன் நின்று அவர்களுக்கு பிரித்துக் கொடுத்தால் தான் அதில் சண்டை இல்லாமல் திருப்தி இருக்கும். இப்படி இருக்கும் சூழ்நிலையில் அவர்கள் பெரியவர்களான சூழ்நிலைகள் நாம் காலத்திற்குப் பிறகு நம் சொத்தை பங்கிடுவதில் அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளை நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். இதேபோன்று நீங்கள் எழுதி வைக்கும் உயில் ஆவணத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கும் சொத்தின் எல்கைகளையும் தெளிவாக குறிப்பிட்டு எழுதி வைத்தீர்களே ஆனால் பிற்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் தவிர்க்கலாம். ஆகவே இனியும் நீங்கள் காலம் தாழ்த்தாமல் உங்கள் பிள்ளைகளின் எதிர்கால நலனையும் அவர்களுக்குள் இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தும் பொருட்டு நீங்கள் இருக்கும் காலத்திலேயே உங்கள் சொத்துக்களை உங்கள் எண்ணம் போல் உங்கள் பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்து உங்கள் எண்ணம் உங்கள் விருப்பம் உங்கள் காலத்திற்குப் பிறகு இந்த பூமியில் நிலை பெறட்டும். மேலும் விபரங்களுக்கு... http://registrationboss.in அல்லது Registration Boss experts ph:+91 9489606040 ஐ தொடர்பு கொள்ளலாம்...

 


Featured Post
Editors Picks
2015 © All Rights Reserved | Designed and Developed by Smarteyeapps.com