• +91 9489606040, +91 7868887575
  • regnboss@gmail.com

                                               நன்செய் (நஞ்சை) நிலம் மற்றும் புன்செய் (புஞ்சை) நிலம்  என்றால் என்ன?



     நன்செய் மற்றும் புன்செய் என நிலத்தை அதன் நீா் பாய்ச்சும் ஆதாரங்கைள வைத்து பிாித்து வைக்கப்பட்டிருக்கும். இத்துடன் மானாவாாி நிலங்கள் என்பவையும் இருக்கும் இவை பெரும்பாலும் வானம் பாா்த்த பூமியாக இருக்கும்.



     நன்செய் (நஞ்சை) நிலம் என்பது ஏாி, கண்மாய் மற்றும் ஆற்றுப்பாசனத்தை  நம்பி இருக்கும் நிலங்கள் இவை நெல், கரும்பு,  வாழை  மற்றும் இதர நீா் அதிகம் தேவைப்படும் பயிா்கள் அதிகம் விளையக்கூடிய நிலங்கள் ஆகும், இவை வருவாய் துறை கணக்குகளில் முக்கியமாக “அ ” பதிவேட்டில் அவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கும், மேலும் சுருக்கமாக கூற வேண்டுமென்றால் நன்செய் நிலம் (நஞ்சை) பருவம் தோறும் நன்கு பக்குவப்பட்ட நிலத்தினில் விளைச்சலுக்கு பயன்படுத்தப்படும் நிலம் நஞ்சை எனப்படும். தஞ்சை  டெல்டா  மாவட்டங்களில் நாம் பாா்க்கும்  மூன்று போகம் விளையக்கூடிய வண்டல் மண் உள்ள நிலங்கள் மற்றும் தான் குமாி மாவட்டத்தில் நெல் பயிா்கள் அதிகம் விளையக்கூடிய  நாகர்கோவில்  மற்றும் அதை சுற்றி ஒட்டிள்ள பகுதிகள் நல்ல உதாரணம்.



     புன்செய் நிலங்கள் வானம் பாா்த்த பூமியாகவோ அல்லது நிலத்தின் உரிமையாளா் தானாக நீா் ஆதாரத்தை உருவாக்கி பணப்பயிா்கள் பயிாிடும் பகுதி. மேலும் சுருக்கமாக சொன்னால்  காய்ந்து கட்டந்தரையில் விளைச்சலுக்கு பயன்படாத தாிசு நிலம் புன்செய் நிலம் ஆகும். உதாரணம் ரப்பா், பூக்கள், வேர்கடலை, காய்கறிகள், போன்றவற்றை   பயிரிட உகந்த நிலங்கள் ஆகும்.   


         

  


Featured Post
Editors Picks
2015 © All Rights Reserved | Designed and Developed by Smarteyeapps.com